Posts

Showing posts from July, 2023

யாழ் மக்களுக்கு ஆறுதிருமுருகனின் வேண்டுகோள்

 #ஆலய_நிர்வாகங்களுக்கு_ஆறுதிருமுருகனின்_அன்பான_கோரிக்கை ! சில நிமிடங்களை ஒதுக்கி தயவு செய்து படியுங்கள் மிகவும் வேகமாக சீரழிந்து செல்லும் இன்றைய இளைய சமூகத்தை பாதுகாக்கும் நோக்கில் அறநெறிப் பாடசாலைகளையும் ஆலயத்தின் செயற்பாடுகளையும் ஒழுங்குபடுத்தும் நோக்கில், தெல்லிப்பளை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த விசேட கூட்டத்தில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் ஆற்றிய உரையின் முழு வடிவம். சமீப காலத்தில் சைவக் கோவில்களில் ஏற்பட்டுள்ள மிக முக்கியமான பிரச்சினை ஒரு கோவிலிலும் தற்பொழுது பிரசங்கம் கிடையாது சைவ நற்சிந்தனை கிடையாது என்பதே ஆகும். எல்லா கோவில்களிலும் கட்டிட வேலைகள் நடக்கின்றன ஆனால் ஆலய நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு கூட ஆலயத்தின் பல மகத்துவங்கள் பற்றி தெளிவாக தெரிவதில்லை. எந்த விக்கிரகம் எதற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் சரியான முகூர்த்தங்கள் என்ன? மற்றும் புராண இதிகாசங்களின் மகிமை என்ன? விரதங்களின் மகிமை என்ன? என்று சொல்லக் கூடிய தகுதி ஆலய நிர்வாகிகளுக்கு கூட அற்ற அவலம் தற்காலத்தில் நிலவுகின்றது. எனது முதலாவது அறிவுரை உங்கள் ஆலயம் சிறிதாக இருக்கலாம் பெரிதாக இருக்க...